< Back
சினிமா செய்திகள்
நடிகை  ஜோதிகாவின் உடற்பயிற்சி வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

நடிகை ஜோதிகாவின் உடற்பயிற்சி வீடியோ வைரல்

தினத்தந்தி
|
15 Aug 2024 2:32 PM IST

உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு, “இந்த சுதந்திர நாளிலிருந்து உண்மையாகவே தற்சார்புடையவராக மாறுவோம்” என நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.

ஜோதிகா 1997-ல் வெளியான டோலி சஜா கே ரஹ்னா என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தியில் நடித்து வருகிறார்.ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினைப் பெற்றது. ஹிந்தியில் மாதவன், அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடிப்பில் வெளியான 'சைத்தான்' திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. மேலும் ஹிந்தியில் ஒரு இணையத்தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்தியில் அஜய்தேவ்கனுடன் சைத்தான், ராஜ்குமார் ராவுடன் ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றதால் ஜோதிகாவுக்கு இந்தி பட வாய்ப்புகள் வருகின்றன.


2006-ஆம் ஆண்டு ஜோதிகாவும் சூர்யாவும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகு உடல் எடை கூடிய ஜோதிகா தற்போது கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு, "இந்த சுதந்திர நாளிலிருந்து உண்மையாகவே தற்சார்புடையவராக மாறுவோம்" எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்