< Back
சினிமா செய்திகள்
நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் மகளான நடிகை ஜோசபின் சாப்ளின் காலமானார்
சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் மகளான நடிகை ஜோசபின் சாப்ளின் காலமானார்

தினத்தந்தி
|
22 July 2023 10:08 AM IST

பிரபல மறைந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினின் மகளான நடிகை ஜோசபின் சாப்ளின் காலமானார்

வாஷிங்டன்,

பிரபல மறைந்த நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இவரது மனைவி ஊனா ஓ நீல். இந்த தம்பதிக்கு பிறந்த 8 குழந்தைகளில் 3-வது குழந்தையாக கலிபோர்னியா மாகாணத்தின் சான்டா மோனிகா நகரில் பிறந்தவர் ஜோசபின் சாப்ளின்.

இவரது தந்தை சாப்ளினின் 1952-ம் ஆண்டு வெளியான லைம்லைட் படத்தில் இளம் வயதில் நடிகையாக அறிமுகம் ஆனவர் ஜோசபின் சாப்ளின்.

அதன்பின் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 1972-ம் ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான 'தி கேன்டர்பரி டேல்ஸ்' என்ற படம் விருது வென்றது. பின்பு, லாடியர் டெஸ் பாவஸ், எஸ்கேப் டு தி சன் ஆகிய படங்களிலும் அதே ஆண்டில் நடித்து புகழ் பெற்றார். ஹெமிங்வே என்ற தொலைக்காட்சியில் வெளியான தொடரிலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், பாரீஸ் நகரில் வசித்து வந்த அவர், கடந்த 13-ந்தேதி தனது 74-வது வயதில் காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.

அவருக்கு சார்லி, ஆர்தர் மற்றும் ஜூலியன் ரோனட் என 3 மகன்கள் உள்ளனர். இதனை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வெரைட்டி என்ற ஊடகம் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்