< Back
சினிமா செய்திகள்
நடிகை ஜமுனா வாழ்க்கை சினிமா படமாகிறது - தமன்னா நடிப்பாரா?
சினிமா செய்திகள்

நடிகை ஜமுனா வாழ்க்கை சினிமா படமாகிறது - தமன்னா நடிப்பாரா?

தினத்தந்தி
|
31 Jan 2023 10:09 AM IST

பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜமுனா கதாபாத்திரத்துக்கு தமன்னா பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் அவரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

பழம்பெரும் நடிகை ஜமுனா சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். தமிழில் தங்கமலை ரகசியம், நிச்சயதாம்பூலம், மருத நாட்டு வீரன், மிஸ்ஸியம்மா, குழந்தையும் தெய்வமும், தெனாலி ராமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

ஜமுனாவின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜமுனா உயிரோடு இருந்தபோதே திரைக்கதை முழுவதும் எழுதி முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஜமுனாவின் சினிமா பிரவேசம், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த அனுபவங்கள், என்.டி.ராமாராவுடன் ஏற்பட்ட மோதல், காதல், திருமணம், அரசியல் பணிகள் போன்ற அனைத்து விஷயங்களையும் படத்தில் கொண்டு வருகிறார்கள்.

இந்த படத்தில் ஜமுனா கதாபாத்திரத்துக்கு தமன்னா பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் அவரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயலலிதா, சாவித்திரி, சில்க் சுமிதா போன்றோரின் வாழ்க்கை சினிமா படமாக வந்துள்ளது.

மேலும் செய்திகள்