< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் முடிவானது?
|1 Nov 2022 10:00 AM IST
ஹன்சிகாவுக்கு திருமணம் முடிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். ஹன்சிகாவை சில நடிகர்களுடன் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வெளியாகி அடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2020-ல் ஹன்சிகாவும், சோகேல் என்பவரும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள். அது லாபகரமாக நடக்கிறது. சோகேலை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்தை டிசம்பர் மாதம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். திருமணம் செய்து கொள்ளப்போகும் ஹன்சிகாவுக்கு திரை உலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.