< Back
சினிமா செய்திகள்
திருமண கோலத்தில் நடிகை ஹன்சிகா..! கோலாகலமாக நடக்கும் நிகழ்ச்சிகள் - வைரல் வீடியோ
சினிமா செய்திகள்

திருமண கோலத்தில் நடிகை ஹன்சிகா..! கோலாகலமாக நடக்கும் நிகழ்ச்சிகள் - வைரல் வீடியோ

தினத்தந்தி
|
3 Dec 2022 3:34 PM IST

இதனையொட்டி 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன.

சென்னை

தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பிரான்சில் ஈபிள் டவர் முன்னால் நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்து இருந்தார். இவர்கள் திருமணம், 450 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நாளை (டிசம்பர்) 4-ந் தேதி நடக்க உள்ளது.

இதனையொட்டி 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன. வியாழனன்று நடைபெற்ற மெஹந்தி ஃபங்ஷன் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தின. மருதாணி சிவந்த கையுடன் ஹன்சிகா அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின.




இதைத்தொடர்ந்து இவருடைய திருமண சடங்குகள் தற்போது துவங்கி உள்ள நிலையில்,இவர்களுடைய திருமண கொண்டாட்டம் சுபி இசை கச்சேரியுடன் தொடங்கியுள்ளது. ஹன்சிகா மணமகள் கோலத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது. இதில் ஹன்சிகா மணமகள் உடையில் சோஹைல் கதுரியாவுடன் நடந்து வருகிறார்.

மேலும் செய்திகள்