< Back
சினிமா செய்திகள்
தனது திருமணத்தை உறுதி செய்த நடிகை ஹன்சிகா..! வருங்கால கணவரை அறிமுகப்படுத்தி நெகிழ்ச்சி.!
சினிமா செய்திகள்

தனது திருமணத்தை உறுதி செய்த நடிகை ஹன்சிகா..! வருங்கால கணவரை அறிமுகப்படுத்தி நெகிழ்ச்சி.!

தினத்தந்தி
|
2 Nov 2022 11:21 AM IST

ஹன்சிகாவுக்கு திரை உலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை,

தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2020-ல் ஹன்சிகாவும், சோகேல் என்பவரும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள். அது லாபகரமாக நடக்கிறது. சோகேலை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்ட்டது .

இந்த நிலையில் தொழிலதிபர் சோகேலை திருமணம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பதிவு செய்துள்ளார்.விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் செய்து கொள்ளப்போகும் ஹன்சிகாவுக்கு திரை உலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்