தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த துஷாரா விஜயன்
|'ராயன்' படத்தில் நடித்துள்ள நடிகை துஷாரா விஜயன் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றன. ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ராயன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள துஷாரா விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "25.11.2023 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். D50 படம் தொடர்பாக தனுஷ் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்ற போன் கால் மூலம் எல்லாம் தொடங்கியது. இது கனவுபோல் இருக்கிறது. இறுதியாக நான் அவரை சந்தித்தேன். அந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.
தற்போது 'ராயன்' வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. தனுஷின் வெற்றியை என்னுடையது போல் உணர்கிறேன். இந்த பயணத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நீங்கள் ஒரு முன்னுதாரணம், லெஜண்ட் தனுஷ் சார். துர்கா கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமானவள் என நம்பியதற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.