< Back
சினிமா செய்திகள்
ஆடை பற்றி சர்ச்சை பேச்சு நடிகை தர்ஷா குப்தா ஆவேசம்
சினிமா செய்திகள்

ஆடை பற்றி சர்ச்சை பேச்சு நடிகை தர்ஷா குப்தா ஆவேசம்

தினத்தந்தி
|
12 Nov 2022 10:51 AM IST

யாராவது தன்னைப்பற்றி மேடையில் அசிங்கமாக பேசுங்கள் என்று சொல்வார்களா? நடிகை தர்ஷா குப்தா ஆவேசம்

காமெடி நடிகர் சதீஷ், நடிகைகள் சன்னிலியோன், தர்ஷா குப்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ஓ மை கோஸ்ட் பட விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் சன்னிலியோன் சேலையிலும், தர்ஷா குப்தா மாடர்ன் உடையிலும் பங்கேற்றனர். மேடையில் சதீஷ் பேசும்போது சன்னிலியோன் கலாசார உடையில் வந்துள்ளார். ஆனால் கோயம்புத்தூர் பெண் தர்ஷா குப்தா கவர்ச்சி உடையில் வந்து இருப்பதை பாருங்கள் என்று உடையை கேலி செய்து பேசினார்.

இதற்கு வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. ஆடை அணிவது பெண்களின் தனிப்பட்ட உரிமை, என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யாதீர்கள் என்று சதீஷை பலரும் கண்டித்தனர். இதற்கு விளக்கம் அளித்த சதீஷ், தர்ஷாதான் சன்னிலியோன் சேலையிலும், தான் கவர்ச்சி உடையிலும் வந்தது அதிர்ச்சியாக உள்ளது என்றும், இதனை மேடையில் நீங்கள் பேசுங்கள் என்று சொன்னதாலேயே நான் அப்படி பேசினேன் என்றும் கூறினார்.

இதற்கு தர்ஷா குப்தா கண்டனம் தெரிவித்து சதீஷை கடுமையாக சாடி உள்ளார். வலைத்தளத்தில் தர்ஷா வெளியிட்டுள்ள பதிவில், "இந்த பிரச்சினையை சதீஷ், என்பக்கம் திருப்பி விடுவது முறையல்ல. நான் உங்களிடம் அப்படி பேசுங்கள் என்று சொன்னேனா? ரொம்ப விசித்திரமாக உள்ளது.

யாராவது தன்னைப்பற்றி மேடையில் அசிங்கமாக பேசுங்கள் என்று சொல்வார்களா? மேடையில் சன்னி லியோன் உடையையும், நான் அணிந்து வந்த உடையையும் ஒப்பிட்டு சதீஷ் பேசியது அப்போதே என்னை காயப்படுத்தியது.

அப்போது அதை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது இப்படி சொல்வது சரியல்ல' என்றார். இந்த சர்ச்சை வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.

மேலும் செய்திகள்