< Back
சினிமா செய்திகள்
ரூ.6 கோடி கேட்கும் நடிகை அனுஷ்கா...!
சினிமா செய்திகள்

ரூ.6 கோடி கேட்கும் நடிகை அனுஷ்கா...!

தினத்தந்தி
|
25 Aug 2023 1:30 PM IST

நடிகை அனுஷ்கா சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளார்

அனுஷ்கா 2005-ல் திரையுலகில் அடியெடுத்து வைத்து பிரபல கதாநாயகியாக உயர்ந்தார். தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். பாகுபலி பல மொழிகளில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் அனுஷ்கா உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன. கடும் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கங்களை மேற்கொண்டும் எடையை குறைக்க முடியவில்லை. கடைசியாக அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் படம் 2020-ல் வெளியானது. மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. மேலும் சில பட வாய்ப்புகள் வந்துள்ளன. இந்த நிலையில் அனுஷ்கா தனது சம்பளத்தை திடீரென்று ரூ.6 கோடியாக உயர்த்தி இருப்பதாக தெலுங்கு இணைய தளங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. இதுவரை ரூ.3 கோடி வாங்கி வந்த அவர் இப்போது சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி இருப்பது பட உலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்