< Back
சினிமா செய்திகள்
படங்கள் வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய நடிகை அனுபமா
சினிமா செய்திகள்

படங்கள் வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய நடிகை அனுபமா

தினத்தந்தி
|
29 Dec 2022 2:23 PM IST

படங்கள் வெற்றியால் சம்பளத்தை நடிகை அனுபமா இரு மடங்காக உயர்த்தி இருக்கிறாராம்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற 'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் ஜோடியாக 'கொடி', அதர்வா ஜோடியாக 'தள்ளிப்போகாதே' ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கில் அனுபமா நடிப்பில் வந்த படங்கள் தோல்வி அடைந்து அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வந்தன.

இந்த நிலையில் நிகில் ஜோடியாக நடித்த 'கார்த்திகேயா-2' படம் வெளியாகி வசூல் குவித்து உள்ளது. மீண்டும் நிகில் ஜோடியாக நடித்த '18 பேஜஸ்' படமும் வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த இரண்டு படங்களின் வெற்றியால் அனுபமா மகிழ்ச்சியில் இருக்கிறார். அவரது மார்க்கெட்டும் எகிறி உள்ளது. பட வாய்ப்புகள் குவிகின்றன.

இதையடுத்து சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி இருக்கிறாராம். ஏற்கனவே ரூ.60 லட்சம் வாங்கிய அவர் இப்போது ரூ.1 கோடியே 20 லட்சம் கேட்கிறாராம். தயாரிப்பாளர்களும் அவர் கேட்ட தொகையை கொடுக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்