ரசிகரின் செயலால் அதிர்ச்சியடைந்த நடிகை அஞ்சு குரியன்
|நடிகை அஞ்சு குரியனுடன் புகைப்படம் எடுக்க வந்த ஒரு ரசிகர் அவரின் காலில் விழுந்து கண்கலங்கி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.
பாலக்காடு,
'நான் பிரகாசம்' திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பெரிய அளவில் பிரபலமானார் அஞ்சு குரியன் . அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நேரம் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து மலையாளத்தில் தனது வாழ்க்கையை தொடங்கினார் . நேரம் படம் வெளியான அடுத்த வருடம் ஓம் சாந்தி ஓசானா என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து மேலும் பிரபலமானார் .
மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான அஞ்சு குரியன், தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு ஜூலை காற்றில், இக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ப் படத்தில் நடிக்கிறார்.
இதனுடைய தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களையும் அழகழகான கவர்ச்சி புகைப்படங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருபவர் அஞ்சு குரியன்.
இந்த நிலையில் அஞ்சு குரியன் கேரளா பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதன்படி அஞ்சு குரியனுடன் புகைப்படம் எடுக்க வந்த ஒரு ரசிகர், அவரின் காலில் விழுந்தார். உடனே அதிர்ச்சியடைந்த அஞ்சு குரியன் அவரை தூக்கி விட அவர் எழுந்து நின்றார். பின்பு அஞ்சு குரியனை பார்த்த சந்தோஷத்தில் கண்கலங்கி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.