கூச்சங்களை மறைத்துத்தான் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் - நடிகை அஞ்சலி பேட்டி
|'கேம் சேஞ்சர்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி நடித்து இருக்கிறார்.
தமிழில் 'அங்காடித் தெரு' படம் மூலம் பிரபலமான அஞ்சலி அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தெலுங்கிலும் நடித்து வருகிறார். அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வெளியாகி அடங்கின. பின்னர் அஞ்சலி, தொழில் அதிபர் ஒருவரை மணந்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்று பேசினர். இதனை அஞ்சலி மறுத்தார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் முத்த காட்சி மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடிக்கும் நெருக்கடிகள் குறித்து பேசி உள்ளார்.
இதுகுறித்து அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், திரைப்படங்களில் படுக்கை அறை மற்றும் முத்த காட்சிகள் இடம்பெறுவது கதைக்கு அவசியமானதுதான். அதில் நடிக்க முடியாது என்று மறுக்க முடியாது. ஆனாலும் அதுமாதிரியான காட்சிகளில் நடிக்கும்போது சங்கடமாக இருக்கும். உடன் நடிக்கும் நடிகர் என்னைப்பற்றி என்ன நினைப்பாரோ, தவறாக நினைத்து விடுவாரோ என்றெல்லாம் நெருடல் இருக்கும். கூச்சங்களை மறைத்துத்தான் அவற்றில் நடிக்க வேண்டும். காதல் காட்சிகள் என்றாலே நடிகர்-நடிகைகள் ஜாலியாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் மாறவேண்டும்'' என்று கூறினார்.