< Back
சினிமா செய்திகள்
திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகை ஆண்ட்ரியா
சினிமா செய்திகள்

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகை ஆண்ட்ரியா

தினத்தந்தி
|
1 Sept 2024 5:03 PM IST

திருவண்ணாமலை கோவிலில் எடுத்த புகைப்படங்களை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

திருவண்ணாமலை,

பிரபல நடிகை ஆண்ட்ரியா. தமிழ், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடல்களும் பாடி இருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த 2005-ம் ஆண்டு வெளியான, 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கிய திரைப்படம், இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்த 'பச்சைக்கிளி முத்துச்சரம்' திரைப்படம் தான்.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி, ரீமாசென் ஆகியோர் நடித்திருந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து, அளவுக்கு அதிகமான கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். தற்போது அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் 'மனுசி' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்