< Back
சினிமா செய்திகள்
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து  பேச மறுத்த நடிகை ஆண்ட்ரியா!
சினிமா செய்திகள்

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேச மறுத்த நடிகை ஆண்ட்ரியா!

தினத்தந்தி
|
3 Sept 2024 4:04 PM IST

“அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்” என ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை ஆண்ட்ரியா பதிலளித்துள்ளார்.

சென்னை,

நடிகை ஆண்ட்ரியா நடிப்பு மட்டுமல்லாது இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான அனல்மேல் பனித்துளி கவனம் பெற்றது. பிசாசு - 2 திரைப்படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.தற்போது, கோபி நயினாரின் மனுசி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, நடிகர் கவினுடன் மாஸ்க் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

நேற்று சென்னையில் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம் மலையாள சினிமாத்துறையில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்த நீதிபதி ஹேமா அறிக்கையைக் குறிப்பிட்டு கேள்விகேட்கப்பட்டது. அதற்கு ஆண்ட்ரியா, 'நோ கமண்ட்ஸ். என்னிடம் அதைக் கேட்க வேண்டாம்' எனப் பதிலளித்தார்.

ஆண்ட்ரியா மலையாளத்தில் அன்னயும் ரசூலும், லண்டன் பிரிட்ஜ், லோஹம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்