< Back
சினிமா செய்திகள்
நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் பிறந்தநாளையொட்டி புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு!
சினிமா செய்திகள்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் பிறந்தநாளையொட்டி புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு!

தினத்தந்தி
|
6 Sept 2024 2:49 PM IST

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் பிறந்தநாளில் தெலுங்கு படத்தின் புதிய பட போஸ்டரை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழில் விஷாலின் ஆக்சன் படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஜெகமே தந்திரம் படத்தில் தனுசுடன் நடித்து இருந்தார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள பூங்குழலி கதாபாத்திரத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்தை ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்து இருந்தார். மலையாளத்தில் மாயநதி, குமாரி ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார்.

தற்போது மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஐஸ்வர்யா லட்சுமியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் ஒரு படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தெலுங்கில் சாய் தரம் தேஜ் படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமியின் 32வது பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்குப் படத்தின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் இவர் வசந்தா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


மேலும் செய்திகள்