< Back
சினிமா செய்திகள்
மீண்டும் தயாரிப்பாளரான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
சினிமா செய்திகள்

மீண்டும் தயாரிப்பாளரான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

தினத்தந்தி
|
15 Oct 2022 8:31 AM IST

சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்தை ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்து இருந்தார். இதையடுத்து மீண்டும் குமாரி என்ற மலையாள படத்தை தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழில் விஷாலின் ஆக்சன் படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஜெகமே தந்திரம் படத்தில் தனுசுடன் நடித்து இருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள பூங்குழலி கதாபாத்திரத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. தற்போது விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி, பிரியா இயக்கத்தில் அசோக் செல்வனுடன் நடிக்கும் படம் ஆகியவை கைவசம் உள்ளன. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்தை ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்து இருந்தார். அந்த படம் மூலம் அவருக்கு நல்ல லாபம் வந்தது. இதையடுத்து மீண்டும் படம் தயாரிக்கிறார். இதுகுறித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறும்போது, ''கார்கி படத்தை தொடர்ந்து குமாரி என்ற மலையாள படத்தை தயாரித்து அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது புராண இதிகாசம் தொடர்புடைய திகில் படமாக இருக்கும். பொன்னியின் செல்வனில் நான் நடித்த பூங்குழலி கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு என்னை உற்சாகப்படுத்தி உள்ளது" என்றார்.

மேலும் செய்திகள்