< Back
சினிமா செய்திகள்
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் நடிகை அதிதி ஷங்கர்
சினிமா செய்திகள்

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் நடிகை அதிதி ஷங்கர்

தினத்தந்தி
|
7 Sept 2024 9:52 AM IST

நடிகை அதிதி ஷங்கர் தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாக உள்ளார்.

சென்னை,

இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர், கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் மாவீரன் படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இவர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா' படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அதிதி ஷங்கர், பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் அதிதி ஷங்கரின் முதல் தெலுங்கு படமாகும். இந்த படத்தை விஜய் கனகமெடலா இயக்க உள்ளார். நடிகை அதிதி ஷங்கர் தெலுங்கு மொழி சரளமாக பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்