நடிப்பு பசி இல்லாத நடிகர்கள் சினிமாவை விட்டு விலக வேண்டும் - சிரஞ்சீவி
|நடிப்பு பசி இல்லாத நடிகர்கள் சினிமாவை விட்டு விலக வேண்டும் என நடிகர் சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. 10 வருட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கடும் குளிரில் ஒரு காட்சியில் நடித்து இருந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு படத்தில் நடிக்க வேண்டுமா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து சிரஞ்சீவி கூறும்போது, "கஷ்டப்பட்டுத்தான் நடிக்க வேண்டும். ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் அந்த படத்துக்கு 100 சதவீதம் நியாயம் செய்ய வேண்டும். கஷ்டத்தை பார்த்து வருந்தக்கூடாது. பிரச்சினை இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது. கொடுத்த காட்சியில் நடித்தே ஆக வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சினிமாவில் இருக்க அருகதை உண்டு. இல்லையேல் வீட்டுக்கு போய் விடலாம். நடிப்பில் புகழ், பெயர் சும்மா வராது. கஷ்டப்பட வேண்டும். கதாபாத்திரங்களுக்காக நடிகர்கள் பசியோடு இருக்க வேண்டும். நடிப்பு பசி செத்து விட்டால் சினிமாவை விட்டே போய் விடவேண்டும். நான் கஷ்டமான காட்சிகளிலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் மாடுபோல் உழைப்பேன். திரையில் என்னை பார்க்கும் ரசிகர்கள் கைதட்டலில் கஷ்டப்பட்டது மறைந்துவிடும்'' என்றார்.