< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சிவாஜி உருவப்படத்துக்கு நடிகர் சங்கத்தினர் அஞ்சலி
|22 July 2023 10:12 AM IST
சிவாஜி கணேசனின் 22-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது
சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் சிவாஜி கணேசனின் 22-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட சிவாஜியின் உருவப்படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நாசர் பேசும்போது, "நான் நடிக்கின்ற நொடிப்பொழுதும் நினைவுக்கு வருகிற என் ஆசான். என் சமூகத்தில் தோன்றி வண்டமிழ் பேசி காலத்தால் கரையாத காவியங்கள் படைத்திட்ட என் பெருமகனார், சிவாஜி கணேசன் நினைவேந்தல் இன்று (நேற்று). தென்னிந்திய நடிகர் சங்கமும், வையமும் உம்மை போற்றதும்", என்றார்.
நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சரவணன், ஸ்ரீமன், பிரகாஷ், ஹேமச்சந்திரன், மேலாளர் தாம்ராஜ் உள்பட சங்க நிர்வாகிகள் பலரும் சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.