< Back
சினிமா செய்திகள்
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்; சினிமா படப்பிடிப்புகள் 10-ந்தேதி ரத்து - நடிகர் நாசர் அறிவிப்பு
சினிமா செய்திகள்

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்; சினிமா படப்பிடிப்புகள் 10-ந்தேதி ரத்து - நடிகர் நாசர் அறிவிப்பு

தினத்தந்தி
|
7 Sept 2023 7:34 AM IST

நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பேரவை கூட்டம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய அமைப்புகள் அன்றைய தினம் பொதுக்குழுவிற்காக படப்பிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்து, தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கு அறிக்கையை சமர்ப்பிப்பார். பொருளாளர் கார்த்தி சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும், பொதுச்செயலாளர் விஷால் சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்களை குறித்தும் விளக்கி உரையாற்ற, துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெறுகிறது.

இந்தநிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களாக உள்ள முன்னணி நடிகர், நடிகைகள் உட்பட நாடக கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர். பொதுக்குழுவிற்கு வருகை தரும் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்