< Back
சினிமா செய்திகள்
தீபாவளி தினத்தில் நடிகர் யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்தது
சினிமா செய்திகள்

தீபாவளி தினத்தில் நடிகர் யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்தது

தினத்தந்தி
|
25 Oct 2022 12:11 AM IST

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு தீபாவளி தினத்தில் பெண் குழந்தை பிறந்தது.

சென்னை,

தமிழ் திரைஉலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவரது தலைமுடியைப் பார்த்து பலரும் அவரை கிண்டல் செய்தார்களாம். ஆனால் அதுவே இன்று அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பை பெற்று தந்துள்ளது. நடிகர்கள் ரஜினி, விஜய், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரைஉலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகி விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் தீபாவளி தினமான நேற்று இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் யோகி பாபு இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்