< Back
சினிமா செய்திகள்
அரசு பள்ளிக்கு உதவிய நடிகர் விஷால்...!

Image Credits : Instagram.com/actorvishalofficial

சினிமா செய்திகள்

அரசு பள்ளிக்கு உதவிய நடிகர் விஷால்...!

தினத்தந்தி
|
16 Oct 2023 12:13 PM IST

நடிகர் விஷால் அரசு பள்ளிக்கு பெரிய தொலைக்காட்சி வாங்கி கொடுத்துள்ளார்.

நடிகர் விஷால் சினிமாவை தாண்டி சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் விளாத்திகுளத்தில் ஹரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது எம்.குமாரசக்கனாபுரம் ஊராட்சி பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று ஆழ்துளை கிணறு அமைத்து 2 பெரிய சின்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர் வசதி செய்து கொடுத்தார். வடக்கு செவல் கிராமத்தில் மரக்கன்றுகள் நட்டார். தற்போது சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள அரசு உயர் நிலை பள்ளி மாணவ மாணவியர் தொலைநோக்கு பாட திட்டங்களை கற்பதற்கு டி.வி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று பள்ளிக்கு பெரிய தொலைக்காட்சி வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக விஷாலுக்கு மாணவ, மாணவியர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்