< Back
சினிமா செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால்!
சினிமா செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால்!

தினத்தந்தி
|
14 Sept 2023 2:02 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி,

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் விஷால் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்