சைக்கிளில் சென்று ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் விஷால்
|நடிகர் விஷால் சைக்கிளில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திரைப் பிரபலங்களைப் பொறுத்தவரை அஜித் தொடங்கி ரஜினி, விஜய், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, கார்த்தி, வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் விஷால் சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, அவர் கருப்பு டி-சர்ட் அணிந்து கொண்டு, சைக்கிளில் சென்று வாக்களித்தார். அவர் சைக்கிளில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.