தூய்மை பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய நடிகர் விஷால்...!
|நடிகர் விஷால் தூய்மை பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடும் வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை,
செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் தூய்மை பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் விஷால் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. வீடியோவை ரசிகர்கள் தற்போது அதிகம் பகிர்ந்து விஷாலை பாராட்டி வருகின்றனர்.