மதுபிரியர்களை அடித்து விரட்டிய நடிகர் விஷால்... வைரலாகும் வீடியோ ...!
|ரத்னம் படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் ரத்னம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டு இருந்த டாஸ்மாக் கடை செட்டில் மது வாங்க குவிந்த மதுபிரியர்களை நடிகர் விஷால் அடித்து விரட்டுவது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், டாஸ்மாக் கடை போன்று அமைக்கப்பட்டு இருந்த செட்டில் மதுபிரியர்கள் சிலர் மதுபானம் கேட்டு சண்டையிடுவதும், அப்போது அங்கு வந்த விஷால் அவர்களிடம் 'யோவ் இது ரத்னம் படத்துக்கு போட்ட செட் யா' என கூறி விரட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ மதுபிரியர்கள் செய்யும் சேட்டைகளை விவரிக்கும் விதமாக நகைச்சுவை நோக்கில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரத்னம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.