< Back
சினிமா செய்திகள்
சர்ச்சையில் நடிகர் விமல்
சினிமா செய்திகள்

சர்ச்சையில் நடிகர் விமல்

தினத்தந்தி
|
20 April 2023 7:15 AM IST

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உயர்ந்துள்ள விமல் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தற்போது அவர் நடித்து திரைக்கு வர உள்ள 'குலசாமி' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த படத்தை சரவண சக்தி டைரக்டு செய்துள்ளார். இதில் முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தான்யா ஹோப் நாயகியாக வருகிறார். பட நிகழ்ச்சியில் டைரக்டர் அமீர் பேசும்போது, "இப்போது பொன்னியின் செல்வன்-2 படத்தையே புரமோசன் மூலம்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோசன் செய்து அந்த படத்தை பிரபலப்படுத்தி வருகிறார்கள். இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும்போது, படத்தின் நாயகன் விமல் இந்த விழாவுக்கு வராதது எனக்கு வருத்தமே. விமலுக்கு 'குலசாமி' படம் கிடைத்தது அபூர்வம். அவர் வராத குறைய ஜாங்கிட் விழாவில் பங்கேற்று நிவர்த்தி செய்துள்ளார்'' என்றார்.

விமல் தனக்கு பேசியதைவிட அதிக சம்பளம் கேட்டதாகவும், அதை கொடுக்காததால் விழாவை புறக்கணித்ததாகவும் பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்