மாளவிகா மோகனனை க்யூட்டாக புகைப்படமெடுத்த நடிகர் விக்ரம்...!
|நம்முடன் ஒரு அசாத்தியமான புகைப்பட கலைஞர் இருந்தால்.. என்று நடிகர் விக்ரமை டேக் செய்து மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
பட்டம் போலே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து கன்னடம், இந்தி படங்களில் நடித்து வந்த அவர், ரஜினியின் 'பேட்ட' மூலம் தமிழுக்கு வந்தார். விஜய்யின் 'மாஸ்டர்', தனுஷின் 'மாறன்' படங்களில் நடித்துள்ளார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் மாளவிகா பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மாளவிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம் அந்த வகையில் மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில், தங்கலான் படத்தின் படப்பிடிப்பின் ஓய்வு நேரத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தினை மாளவிகா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தினை நடிகர் விக்ரம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. மாளவிகா இதனை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து, "பாம்புகள், ஏணிகள் மற்றும் நிழல்கள். படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் ஓய்வு கிடைக்கும்போது நம்முடன் ஒரு அசாத்தியமான புகைப்பட கலைஞர் இருந்தால்.." என நடிகர் விக்ரமை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.