'தளபதி 68' படத்தின் பாடலாசிரியராக இணைந்த மதன் கார்க்கி
|நடிகர் விஜய்யின் 'தளபதி 68' படத்தின் பாடலாசிரியராக மதன் கார்க்கி இணைந்துள்ளார்.
சென்னை,
'லியோ' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். 'தளபதி 68' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் நேற்று விஜயதசமி நாளில் படத்தின் பூஜை நடத்தப்பட்டது. இந்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டது.
இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் பாடலாசிரியராக மதன் கார்க்கி இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த படங்களில் அஸ்க் லஸ்கா, கூகுள் கூகுள், செல்ஃபி புள்ள போன்ற ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் 'தளபதி 68' படத்தில் மீண்டும் விஜய்யுடன் பாடலாசிரியராக இணைந்துள்ளார்.