< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

நடிகர் விஜயின் மகன் இயக்குநராகிறார்...!

தினத்தந்தி
|
28 Aug 2023 3:36 PM IST

நடிகர் விஜயின் மகன் இயக்குநராகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்.

சென்னை,

நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் குறும்பட இயக்குநராக பணியாற்றி வருவதாக அவ்வபோது சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த பதிவினை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் ஜேசன் சஞ்சய் தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரைப் போன்று புகழ்பெற்ற இயக்குநராக வலம் வருவார் என்றும் பதிவிட்டு வந்தனர்.

இந்தநிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம். அடுத்த படத்துக்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்களை லைகா நிறுவனம் டிவிட்டரில்(எக்ஸ்) பகிர்ந்துள்ளது.

விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து ஜேசன் சஞ்சய் நடனமாடி இருந்தார். இந்தநிலையில், விஜய் சேதுபதியை வைத்து தனது முதலாவது திரைப்படத்தை ஜேசன் இயக்குவார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் சஞ்சய் 'புல் தி டிரிக்கர்' என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த குறும்படம் யூடியூபில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்