< Back
சினிமா செய்திகள்
ஏழை மக்களுக்கு நடிகர் விஜய் வழங்கிய மதிய உணவு..! சுட சுட பிரியாணி.. முட்டை .. கறி குழம்பு
சினிமா செய்திகள்

ஏழை மக்களுக்கு நடிகர் விஜய் வழங்கிய மதிய உணவு..! சுட சுட பிரியாணி.. முட்டை .. கறி குழம்பு

தினத்தந்தி
|
28 May 2023 3:48 PM IST

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஒரு நாள் மதிய உணவு வழங்கப்பட்டது.

சென்னை,

பட்டினியால் வாடும் மக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மே 28 ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சுட சுட பிரியாணி, முட்டை, கறி குழம்புடன் மதிய உணவு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கூறுகையில், 'உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில், நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது, அதுமட்டுமில்லாமல் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மதிய உணவு வழங்கப்படுகிறது' என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்