படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் செல்பி எடுத்த நடிகர் விஜய்
|படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது .
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (The Greatest Of All Time) படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.
'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் செல்பி எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.