< Back
சினிமா செய்திகள்
ஷாருக்கான் நடிக்கும் பதான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை தனது டுவிட்டரில் வெளியிட்டார் நடிகர் விஜய்
சினிமா செய்திகள்

ஷாருக்கான் நடிக்கும் 'பதான்' திரைப்படத்தின் தமிழ் டிரைலரை தனது டுவிட்டரில் வெளியிட்டார் நடிகர் விஜய்

தினத்தந்தி
|
10 Jan 2023 12:16 PM IST

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

சென்னை,

ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள 'பதான்' இந்தி படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் கவர்ச்சியாக இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

படம் தொடர்பாக சர்ச்சை எழுந்துவரும் நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணம் பதான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

நடிகர் விஜய் முதல்முறையாக இன்னொரு நடிகரின் படத்திற்கான டிரைலரை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்