'கோட்' படப்பிடிப்புக்காக துபாய் புறப்பட்டார் நடிகர் விஜய்
|'கோட்' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் துபாய் புறப்பட்டார்.
சென்னை,
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' வெளியாகி இணையத்தில் வைரலானது. 'கோட்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் கடந்த மாதம் 19-ந்தேதி சென்னை திரும்பினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் துபாய் புறப்பட்டார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவரை கண்ட ரசிகர்கள் உற்சாகமாக 'விஜய் அண்ணா' என்று அழைத்தனர். அவர்களை பார்த்து நடிகர் விஜய் புன்னகைத்து கடந்து சென்றார். நடிகர் விஜய் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.