மீண்டும் திகில் படத்தில் வெற்றி
|தமிழில் 8 தோட்டாக்கள், ஜீ வி போன்ற திரில்லர் படங்களில் நடித்துள்ள வெற்றி மீண்டும் ‘மெமரீஸ்' என்ற திகில் கதையில் நடித்து இருக்கிறார்.
பார்வதி அருண், தனன்யா, ரமேஷ் திலக், ஹரீஷ் பெரடி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஷியாம் பர்வீன் டைரக்டு செய்துள்ளார்.
சினிமா துணை இயக்குனராக இருக்கும் இளைஞன் ஒரு அறைக்குள் அடைக்கப்படுகிறான். அவனுக்கு நினைவுகள் மறந்து விடுகிறது. சில கொலை பழிகளும் விழுகிறது. அவற்றில் இருந்து எப்படி மீள்கிறான் என்பது கதை.
வெற்றி கூறும்போது, "நான் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்தபோது மெமரீஸ் படத்தின் கதையை கேட்டேன். இந்த படம் தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதையாக இருக்கும். படம் தொடங்கியபோது ஊரடங்கு போட்டனர். காட்டுக்குள் பெரும்பகுதி படப்பிடிப்பை கஷ்டப்பட்டு நடத்தினோம்.
எனது நடிப்பில் அடுத்தகட்டத்துக்கு இந்த படம் இருக்கும். அனைத்து படங்களிலும் ஒரே மாதிரியாக நடிக்கிறீர்களே என்கின்றனர். நான் முறையாக நடிப்பு பயிற்சி எடுத்து இருக்கிறேன். வேறு மாதிரியான கதை, கதாபாத்திரங்களில் நடிக்கவும் முயற்சித்து வருகிறேன்'' என்றார்.