< Back
சினிமா செய்திகள்
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் எப்படி இருக்கும்? அப்டேட் கொடுத்த நடிகர் வசந்த் ரவி
சினிமா செய்திகள்

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் எப்படி இருக்கும்? அப்டேட் கொடுத்த நடிகர் வசந்த் ரவி

தினத்தந்தி
|
19 April 2023 10:12 PM IST

ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரஜினியை இந்த படத்தில் பார்க்கப் போகிறார்கள் என்று நடிகர் வசந்த் ரவி கூறினார்.

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ராக்கி, தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்த வசந்த் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது குறித்து நடிகர் வசந்த் ரவி அப்டேட் கொடுத்துள்ளார். ரஜினிக்காக இயக்குனர் நெல்சன் தனித்துவமான கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளதாகவும், ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரஜினியை இந்த படத்தில் பார்க்கப் போகிறார்கள் என்று அவர் கூறினார்.

ரஜினிகாந்த் நடிக்கும் 'முத்துவேல் பாண்டியன்' கதாபாத்திரம் கண்டிப்பான ஜெயிலராக இருக்கும் அதே வேளையில் கருணை கொண்டவராகவும் அவர் இருப்பார் என வசந்த் ரவி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்