< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்
|24 Dec 2022 7:50 PM IST
திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும் என்று வடிவேலு கூறினார்.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது மனதுக்கு ஆறுதலை தருகின்றது என்றார்.
திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும் என்று அவர் கூறினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வடிவேலு நடிப்பில் அண்மையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகிய நிலையில், உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன' படத்தில் வடிவேலு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.