'இறுகப்பற்று' படக்குழுவுக்கு நடிகர் சூர்யா பாராட்டு
|'இறுகப்பற்று' படத்தின் படக்குழுவுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்து உள்ளார்.
சென்னை,
இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று முன்தினம் (அக்டோபர் 6) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், 'இறுகப்பற்று' படக்குழுவை பாராட்டி நடிகர் சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர், "இறுகப்பற்று திரைப்படம் நிறைய அன்பைப் பெறுவதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. பொடன்ஷியல் ஸ்டுடியோஸ்-லிருந்து பெரிய மனதுடன் மீண்டும் ஒரு நல்ல உள்ளடக்கத்திற்கான படம். இயக்குனர் யுவராஜ் தயாளன் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.