< Back
சினிமா செய்திகள்
மீண்டும் நடிகரான பாடகர் மனோ
சினிமா செய்திகள்

மீண்டும் நடிகரான பாடகர் மனோ

தினத்தந்தி
|
24 Feb 2023 7:58 AM IST

பிரபல சினிமா பின்னணி பாடகர் மனோ நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விக்னேஷ் ஷா இயக்கத்தில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

பிரபல சினிமா பின்னணி பாடகர் மனோ 1992-ல் வெளியான சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து இருந்தார். அதன் பிறகு நடிக்கவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விக்னேஷ் ஷா இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

மீண்டும் நடிகரானது குறித்து மனோ கூறும்போது, "இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் விக்னேஷ் ஷா, தயாரிப்பாளர் கே.குமார் மற்றும் சிவா ஆகியோருக்கு நன்றி. ''சிங்காரவேலன்' படத்தில் நடித்த பிறகு இளையராஜா என்னை அழைத்து, மீண்டும் நடிக்கச் சென்றால் உனக்காக பாட்டு காத்துக்கொண்டு இருக்காது என்றார்.

அதன்பிறகு நடிப்பின் பக்கம் திரும்பி பார்க்கவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இதுவரை 26 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளேன்'' என்றார்.

சிவா பேசும்போது, "26 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ள மனோ தமிழ் திரையுலகின் சொத்து. இந்த படத்தில் குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அனைவருக்கும் பிடிக்கும் நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. லியோன் ஜேம்ஸ் சிறப்பாக இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் டாக்டர் பிரபுதிலக் இந்த படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி'' என்றார்.

மேலும் செய்திகள்