< Back
சினிமா செய்திகள்
தக் லைப் படத்தில் இணையும் நடிகர் சிம்பு...கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறாரா?
சினிமா செய்திகள்

தக் லைப் படத்தில் இணையும் நடிகர் சிம்பு...கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறாரா?

தினத்தந்தி
|
8 May 2024 12:19 PM IST

தக் லைப் படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமான அறிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், 2ம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் நடிகை திரிஷா கலந்துக்கொண்டார். மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் 'தக் லைப் படத்தில் இருந்து துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அவர்களுக்கு பதிலாக சிம்புவும், அருண் விஜய் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து, அண்மையில் சமூக வலைதளங்களில் 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று லீக் ஆனது. அதில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் இடம்பெற்றனர். இதன் மூலம் சிம்பு நடிப்பது உறுதியாகிவிட்டதாக நெட்டிசன்கள் கூறிவந்தனர். ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தக் லைப் படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ மே 8ம் தேதி (அதாவது இன்று) வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது. அதன்படி 'தக் லைப்' படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரையும், வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சிலம்பரசன் கமல்ஹானுக்கு மகனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்