< Back
சினிமா செய்திகள்
சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருது வென்ற நடிகர் ஷாருக்கான்
சினிமா செய்திகள்

சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருது வென்ற நடிகர் ஷாருக்கான்

தினத்தந்தி
|
21 Feb 2024 1:47 AM IST

விருதுகளை விரும்புபவன் நான். அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு என விருது பெற்ற நடிகர் ஷாருக்கான் கூறினார்.

புனே,

2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. இதில், ஜவான் படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருது பெற்ற பின்னர் நடிகர் ஷாருக்கான் பேசும்போது, நான் சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவன் என என்னை கருதியதற்காக நடுவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நான் ரொம்ப நாளாக சிறந்த நடிகர் விருது வாங்கவில்லை. மீண்டும் இந்த விருது வாங்காமேலேயே போய் விடுவேன் என்பதுபோல் தோன்றியது.

அதனால், இந்த விருது கிடைத்திருப்பதில் இப்போது நான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். விருதுகளை விரும்புபவன் நான். அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு என கூறியுள்ளார்.

ஜவான் படக்குழுவினர் அனைவருக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் அவர் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து கடுமையாக உழைப்பேன். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மக்களை மகிழ்விப்பேன். அதற்கு நான் உறுதி கூறுகிறேன் என அவர் கூறினார்.

மேலும் செய்திகள்