< Back
சினிமா செய்திகள்
நடிகர் சர்வானந்த் திருமண நிச்சயதார்த்தம்
சினிமா செய்திகள்

நடிகர் சர்வானந்த் திருமண நிச்சயதார்த்தம்

தினத்தந்தி
|
27 Jan 2023 8:37 AM IST

சர்வானந்த்- ரக்‌ஷிதா ரெட்டி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது.

தமிழில் 'நாளை நமதே', 'எங்கேயும் எப்போதும்', 'ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சர்வானந்த். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.

சர்வானந்துக்கு திருமணம் முடிவாகி உள்ளது. அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணை மணக்க இருக்கிறார். இவர் ஆந்திர முன்னாள் மந்திரி போஜ்ஜல கோபாலகிருஷ்ணாவின் பேத்தி ஆவார்.

சர்வானந்த்- ரக்ஷிதா ரெட்டி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தனது மனைவி உபாசனாவுடன் கலந்து கொண்டு வாழ்த்தினார். சர்வானந்த் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திருமண தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்