< Back
சினிமா செய்திகள்
லெஜண்ட் சரவணனின் பட வேலைகளை துவங்கிய கருடன் பட இயக்குநர்
சினிமா செய்திகள்

லெஜண்ட் சரவணனின் பட வேலைகளை துவங்கிய கருடன் பட இயக்குநர்

தினத்தந்தி
|
18 May 2024 7:37 PM IST

கருடன் படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அந்த படத்தை முடித்த பின்னர் லெஜண்ட் சரவணன் படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

நடிகர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான தி லெஜண்ட் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் சரவணனுடன் இணைந்து விவேக், ஊர்வசி ரவுடேலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஜேடி -ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சயின்டிஸ்ட்டாக லெஜண்ட் சரவணன் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு முதல் படமாக இருந்த சூழலில் படத்தை அவரே தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வெற்றி படமாக மாறியது.

இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொடி, எதிர்நீச்சல் போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது சூரி, சசிகுமார் நடிப்பில் கருடன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் கடந்த மார்ச் மாதத்திலேயே ரிலீசாகவிருந்த சூழலில் படத்தின் ரிலீஸ் இம்மாத இறுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த படத்திற்கான தன்னுடைய வேலைகளை துரை செந்தில்குமார் முடித்துள்ளதாகவும் இதனால் அடுத்ததாக லெஜண்ட் சரவணனின் அடுத்தப்பத்திற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, படத்தில் லெஜெண்ட் சரவணனுக்கு யார் ஜோடியாவார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்