< Back
சினிமா செய்திகள்
Actor Samuthirakani spoke harshly about the low quality criticism.
சினிமா செய்திகள்

'தரம் தாழ்ந்த விமர்சனம் செய்பவர்கள் மனநோயாளிகள்' - கடுப்பாகி பேசிய நடிகர் சமுத்திரக்கனி

தினத்தந்தி
|
29 May 2024 8:25 PM IST

ரசிகர்கள் உள்ளவரை சினிமா இருக்கும் என்று சமுத்திரக்கனி கூறினார்.

சென்னை,

இந்த நிலையில் தென்காசியில் உணவக திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். படங்களுக்கு தரம் தாழ்ந்த விமர்சனம் வருவது தொடர்பான கேள்விகளுக்கு,

தரம் தாழ்ந்த விமர்சனம் செய்பவர்கள் மனநோயாளிகள். அவர்களை கடந்து போய்விட வேண்டும். அதற்கு ஒன்னும் பன்ன முடியாது. அவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். நாம் நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.

தியேட்டருக்கு மக்கள் வருவது ரொம்ப குறைந்து விட்டது. கிராமபுரத்தில் யாரும் தியேட்டருக்கு வருவதில்லை. முதல் நாள் முதல் காட்சிக்கு வருபவர்களை பார்த்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு.

தமிழ் சினிமா வளர்ந்துகொண்டேதான் இருக்கும். ரசிகர்கள் உள்ளவரை சினிமா இருக்கும். வட சென்னை 2 வரும். அதற்கான வேலை நடந்துகொண்டு இருக்கிறது. குழந்தைகள் மனதில் நல்லதை விதைதால் அடுத்த தலைமுறை மாறும். அதற்காக வேலை செய்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்