< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல்
|15 Feb 2023 6:32 PM IST
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரண்டு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில், அனுமதியின்றி வளர்த்து வந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.