நடிகர் ராம்சரணுக்கு ரூ.1,300 கோடி சொத்து
|சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு நடிகருமான ராம்சரண் 2009-ல் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'மகதீரா' படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படம் தமிழிலும் வந்தது. ஆஸ்கார் விருது பெற்ற 'ஆர் ஆர் ஆர்' படம் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளார். ஹாலிவுட் பட வாய்ப்புகள் வருகின்றன.
இந்தநிலையில் ராம்சரண் தற்போது தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரது சொத்து விவரங்கள் இணைய தளத்தில் பரவி வருகிறது. சிரஞ்சீவி சொத்துகளும் இவருக்கு வரும் என்கின்றனர். மொத்தம் ரூ.1,300 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்பு ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்கிய ராம்சரண் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ரூ.100 கோடியாக உயர்த்தி உள்ளார்.
ஐதராபாத்தில் 25 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட பிரமாண்ட வீட்டில் வசிக்கிறார். இந்த வீட்டின் மதிப்பு ரூ.40 கோடி இருக்கும் என்கின்றனர். நிறைய வெளிநாட்டு சொகுசுகார்கள் வைத்துள்ளார். விளம்பரங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார். 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருக்கிறார். இதன் மூலம் பல கோடி வருமானம் வருகிறது. பட தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.