< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
|11 April 2024 8:24 PM IST
நடிகர் ராம்சரண் கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
சென்னை,
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, வருகிற 13-ந்தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார்.
இந்த விழாவில், நடிகர் ராம்சரண் கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த விருதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.