நடிகர் ராம்சரண் காயம்
|திடீரென்று ஏற்பட்ட விபத்தில் ராம்சரண் முகத்தில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதையடுத்து சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ராம்சரண். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த வாரம் முக்கிய சண்டை காட்சிகளை படமாக்கினர்.
இந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட விபத்தில் ராம்சரண் முகத்தில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதையடுத்து சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ராம்சரண் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
இந்த நிலையில் கேம் சேஞ்சர் படப்பிடிப்பை நடிகர்களின் கால்ஷீட் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்து இருப்பதாக பட நிறுவனம் அறிவித்து உள்ளது. படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.