< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்
|12 March 2024 8:21 PM IST
ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி,
நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். இரண்டு பேரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில், ரஜினிகாந்தின் மகள்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுக்கு தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினார்கள்.