< Back
சினிமா செய்திகள்
வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்...!
சினிமா செய்திகள்

வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்...!

தினத்தந்தி
|
12 Nov 2023 11:49 AM IST

நடிகர் ரஜினிகாந்தின் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். போயஸ் கார்டனில் தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து கூறினார். ஆண்டுதோறும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகைகளின் போது தன் வீட்டின் முன் குவியும் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்